Home » பொரியல், கூட்டு, ரசம் – 4
தமிழ்நாடு

பொரியல், கூட்டு, ரசம் – 4

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. யாரோடு யார் கூட்டு என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. திமுக, அதிமுக என இரண்டு தரப்பிலும் கூட்டணி குறித்துப் பேசிக்கொண்டிருந்த தேமுதிக, இறுதியாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. அவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான ஒரு மாநிலங்களவை இடத்தையும் அவர்களுக்கு ஒதுக்கியிருக்கிறது திமுக. 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக, திமுகவுடன் கூட்டணியில் இணைவது இதுவே முதல்முறை. பழம் நழுவிப் பாலில் விழும் எனக் கலைஞர் அழைத்தும் அறிவாலயம் பக்கமே இதுவரை போகாமல் இருந்தது தேமுதிக.

நடிகர் சங்கத்தின் தலைவராகத் திறம்படச் செயலாற்றியவர் விஜயகாந்த். மிகப்பெரும் கடன் சுமையிலிருந்த சங்கத்தை மீட்டெடுத்தார். ரசிகர் மன்றங்கள் மூலமாகப் பல ஆண்டுகளாகத் தன்னை அரசியலுக்குத் தயார்ப்படுத்தி வந்தார். நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்து வந்தார். திரை வாழ்க்கையில் சரிவைச் சந்திக்கத் தொடங்கியபோது அவருடைய அரசியல் பயணம் ஆரம்பமானது. அவர் கடைசியாக நடித்த திரைப்படங்கள் அவருடைய அரசியல் பயணம் தொடங்கவிருப்பதை உறுதிப்படுத்தின.

2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் தேமுதிக கட்சியைத் தொடங்கினார். அந்த மாநாட்டில் பெருமளவில் மக்கள் கூடினர். தேசியமும் திராவிடமும் முற்போக்கும் இணைந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனக் கட்சிக்குப் பெயர் சூட்டினார். கட்சியின் பெயரே தொடக்கத்தில் கேலியாகப் பார்க்கப்பட்டது. ஊழல் ஒழிப்பையும், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான அரசியலையும் தன்னுடைய கட்சியின் கொள்கைகளாக அறிவித்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!