Home » நீ வேறு, நான் வேறு – 65
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 65

65. கூடித் தொழில் செய்

அது இந்திய உளவுத் துறையின் முயற்சியால் நடந்ததா அல்லது வேறு தரப்புகளின் உதவியால் நிகழ்ந்ததா என்று தெரியாது. இந்திய உளவுத் துறையின் பங்களிப்பு கணிசமாக இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால் உறுதி செய்ய வழியில்லை. 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் BRAS என்றொரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம், அமைப்பு, கட்டுமானம், செயல்பாடு அனைத்தையும் கூர்ந்து கவனித்தால் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை (PLO) அப்படியே பிரதியெடுத்து ஒரு பலூசிஸ்தான் பதிப்பு போட்டாற்போலிருந்தது. BRAS என்பது Baloch National Freedom Movement என்பதன் சுருக்கம். ஆளுக்கொரு இயக்கம், ஊருக்கொரு கட்சி, பேருக்கொரு கோஷம், பெருமைக்குச் சில சம்பவங்கள் என்றிருந்தால் இந்த ஜென்மத்தில் பலூசிஸ்தான் விடுதலை என்பது கைகூட வாய்ப்பே இல்லை என்று யாரோ சொல்லியிருக்க வேண்டும். அல்லது பலூச்சி விடுதலை இயக்கங்களுக்கே இது உறைத்திருக்க வேண்டும்.

ஏனென்றால், BLAவுக்குள் பிளவுகள் உண்டாகி ஒன்று, இரண்டு, மூன்று தரப்புகள் தனியே போனது ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்தபோதே, பலூசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் குட்டிக் குட்டியாகப் பல போராளி இயக்கங்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. மறுபுறம் பலூசிஸ்தான் ரிபப்ளிகன் ராணுவம் (BRA), பலூசிஸ்தான் விடுதலை முன்னணி (BLF), பலூச் ரிபப்ளிகன் கார்ட்ஸ் (BRG) என்று ஏற்கெனவே உருவாகி, அவ்வப்போது பெரிய சம்பவங்கள் செய்துகொண்டிருந்த இயக்கங்களும் மிகத் தீவிரமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டிருந்தன. புதிய சிறிய அமைப்புகளைத் தங்களுடன் இணைத்துவிடுவதில் இந்தப் பெரிய அமைப்புகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. பழம் பெருச்சாளியான BLAவும் அதிலிருந்து பிரிந்தவர்களும் மறுபுறம் தங்கள் பங்குக்கு பகிரங்கமாகவே ஆள் சேர்ப்பு அறைகூவல் விடுக்கத் தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் மீண்டும் இது இனக்குழு ரீதியிலான கட்சி சேர்ப்பு நடவடிக்கையாக உரு சிறுத்துவிடக்கூடிய அபாயம் தெளிவாகத் தெரிந்தது. ஒரே இலக்கின் மீது ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் ஒரே சமயத்தில் தாக்குதல் திட்டங்களை நிகழ்த்தப் போக, ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டு சாகும்படியான சம்பவங்களும் நடந்தன. இது உண்டாக்கிய கடுப்பில், சகோதரச் சண்டை பெருகி, யார் யாரை எதற்காக அடிக்கிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும் அபாயம் உண்டானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!