Home » மிச்சமின்றி உச்சம் தொடு – 9
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 9

தப்புக் கணக்கு

ஒருகட்டத்தில் இமயமலைக்குத் தொடர்ந்து சென்று வந்த ரஜினிகாந்த், மகா அவதார் பாபாஜியால் கவரப்பட்டார். மிகவும் கடினமான மலையேற்றத்துக்குப் பிறகே அடையக்கூடிய அவர் வசித்த குகைக்குச் செல்வதை இன்று வரை கடைப்பிடித்து வருகிறார். அவர் நினைவாக எடுக்கப்பட்ட படம்தான் பாபா.

உண்மையில் அந்தப்படத்தில் அவர் செய்த தவறு, தான் என்ன செய்தாலும் தன்னுடைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற தப்புக் கணக்குப் போட்டதுதான். பட வெளியீட்டுக்கு முன் நடந்த பல சம்பவங்கள் எதிர்பார்ப்பை உச்சத்தில் வைத்தன. ஓர் அரசியல் கட்சியோடு நடந்த மோதலில் அந்தப்படத்தை ஓட விடமாட்டோம் என்ற குரல் வலுத்தது.

அதையெல்லாம் மீறி வெளிவந்தாலும் முதல் நாளிலேயே இது தங்களுக்கான படமல்ல என்று ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர். தனது தலைவர் இப்படித்தான் இருப்பார், அவருடைய படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று சென்ற ரசிகனுக்கு அந்தப்படம் ஒட்டவே இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!