தமிழ் அறிவுச் சமூகத்தை உலுக்கியுள்ள பெரியார் அறிவுலகம் நூலக ஊழல் புகாரில் தினந்தோறும் மேலும் பல மோசடிகள் வெளிப்பட்டு வருகின்றன.இந்த ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பதிப்பக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு, ஐந்து நூலகத் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் சிறப்புப் பொது நூலகங்கள் கட்ட கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட நூலகக் கட்டடங்கள் வடிவமைத்துக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டன.
ஆனால் அவற்றில் வைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான நூல்கள் ஏஐ உதவியுடன் போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. முதலில், கோவையில் சென்ற மாதம் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட போலி நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை வெளியிட்டார்.















Add Comment