Home » இதுவா மாற்றம்?
நம் குரல்

இதுவா மாற்றம்?

அருள் விக்னேஷ்

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆளும் தவெக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அநாகரீகக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக வெளியாகியுள்ள தகவல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தை மூடி மறைக்க ஆளும் கட்சி முயன்றதாகவும் பொதுமக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அருள் விக்னேஷ், ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு அலைபேசி வாயிலாகப் பாலியல் சீண்டல் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக திமுக எம்.பி கனிமொழி கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளப் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதோடு, அருள் விக்னேஷ் குடிபோதையில் அந்த அதிகாரியின் வீட்டுக்குச் சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அதையடுத்து அந்த அதிகாரிக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்தார். அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகத் தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக அவர் கூறியிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!