செம்பருத்தி எழுத்துரு உருவாக்கத்தில் அழகான எழுத்துகளை வடிவமைப்பது ஒரு பாதி வேலை. அதைக் கணினியில் பயன்படுத்தும் விதத்தில் மாற்றுவது மறு பாதி வேலை. எழுத்துரு வடிவமைப்பாளர், எழுத்துருப் பொறியாளர் என்று இரு வேறு வேலைகள் இவை. இன்னும் சில நுட்பமான வேலைகளும் இத்துறையில் உள்ளன. அது பற்றிய விழிப்புணர்வு...
Tag - உரு தொடர்
29 இரண்டாவது குரல் முத்தரசு, முத்துவின் நண்பர். ஒரு பத்திரிகை தொடங்க உள்ளதாகத் தெரிவித்து அதற்கான தொழில்நுட்பப் பணிகளைச் செய்ய முத்துவை அணுகினார். இணையப் பத்திரிகையாக இதைச் செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினார் முத்து. முத்தரசுவும் ஒப்புக் கொண்டார். முத்து எந்தப் பணியைச் செய்தாலும் தொலை நோக்குப்...
28 அமைதியோ அமைதி கணித்தமிழ் ஆர்வலர்கள் பலரும் முத்து கார் வாங்கப் போன கதையை அவ்வப்போது சிலர் மேற்கோள் காட்டிப் பேசுவதைக் கேட்டிருப்போம். வால்வோ கார், புதிய மாடல் அறிமுகமானதைத் தொடர்ந்து, அதை வாங்க ஷோரூம் போனார். புதிய காரின் எல்லா புதிய அம்சங்களையும் பார்வையிட்டார். அவருக்குப் பிடித்திருந்தது...
27. எழுத்துரு அழகியல் உலகத் தமிழர்களின் அன்புக்குரிய இணைமதி எழுத்துருவில் 18 குறைகள் இருக்கிறதென ஆப்பிள் நிறுவனம் திருப்பி அனுப்பியதை முன்னரே குறிப்பிட்டோமல்லவா! அதைப்போல இன்னொரு சம்பவமும் நடந்தது. சிவபக்தரான இலங்கைத் தமிழர் ஒருவர் தனக்குத் தனித்துவமான எழுத்து வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தார்...
26. திறமைக்கு மரியாதை முத்துவின் முயற்சிகள் அனைத்தும் சாதனைகள்தாம். பல கோடிப் பேர் பயன் பெறும் செயல்களைச் செய்திருக்கிறார். கூகுள், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துள்ளார். முன்னுதாரணத் தொழில்முனைவராக உயர்ந்துள்ளார். ஆனால், தொழிலதிபர் ஆனாரா? அந்தக் கோணத்தில் அவர்...
25. வாங்க பேசலாம் 800 கோடிக்கும் மேல் மக்கள் இந்த உலகில் வசிக்கிறார்கள். 7000க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஆனால் உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவு மக்கள் பேசும் மொழிகள் எத்தனை தெரியுமா? சுமார் 200 மட்டுமே. ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே பேசும் மொழிகள் என்று தோராயமாக 6000 மொழிகள் உள்ளன...
24 யாதும் மொழியே யாவரும் கேளிர் வட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட முத்து, ஒரு கோயிலுக்குச் சென்றார். பழங்காலக் கோயில்களில் ஏதேனும் கல்வெட்டுகள் இருப்பின் அவற்றில் இருக்கும் எழுத்துகளை ஆராய்வது அவருக்கு விருப்பமான ஒன்று. அவர் சென்றிருந்த கோயில், நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. எனவே தன்...
23 தமிழ் போட்ட சோறு ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்த முத்துவின் நண்பர் எச்டிசி நிறுவனத்திற்குப் பணி மாறிச் சென்றார். தைவானில் இருந்து தொலைபேசி மூலம் ஒருநாள் முத்துவை அழைத்தார் அந்த நண்பர். ஆன்ராய்டு தொழில்நுட்பத்தில் இயங்கும்படி இந்தி மொழிக்கு எழுத்துரு, கீபோர்டு எல்லாமே செய்ய வேண்டும் என்றார்...
22 பணம் பேசும் மொழி செல்பேசிகளில் ‘செல்லினம்’ தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிக் கொண்டிருந்தது. ஏர்செல் நிறுவனம் சென்னை பாரிஸ் கார்னரில் நாற்பதுக்கு நாற்பதடி அளவில் பிரமாண்டப் பதாகை வைத்து “தமிழில் சொல்லும் போது ஆங்கிலம் எதற்கு?” என்று விளம்பரம் செய்தது. அப்போதே மலையாள மொழிக்குச் செல்லினம் போலவே...
21 ஆட்சியதிகாரத்தின் மொழி தூரத்தில் தெரியும் வெளிச்சம் நம்பிக்கையைக் கொடுக்கும். போய்ச் சேர்ந்துவிட்டதாக எண்ணிவிடலாகாது. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் முரசு அஞ்சல் நிறுவிய திட்டம் அச்சமயத்தில் கிடைத்த பெரிய வாய்ப்பு. அதைவிடச் சிறிய திட்டப்பணிகள் சிலதும் முரசு சிஸ்டம்ஸ் செய்தது. ஒரு சில மாதங்களுக்கு...