Home » பனிப் புயல் – 37
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 37

விமானத்தில் வந்திறங்கிய காதல்

மார்ச் – 1980.
எஸ்த்ராதா அரங்கம்,
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,
ரஷ்யா.

சார்லி சாப்ளினைப் போல ரஷ்யாவின் பிரபலமான மேடைச் சிரிப்புரையாளர் அர்காதி ரைகின். இவரது நிகழ்ச்சிக்கான நான்கு டிக்கெட்டுகளுடன் அரங்கத்தின் நுழைவாயிலில் காத்துக்கொண்டிருந்தார் வலோத்யா. நண்பர் ரவுல்துகின் தனது காதலியை அசத்துவதற்காக வலோத்யா மூலம் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்திருந்தார்.

ரவுல்துகினோடு அவரது காதலியும் இன்னொரு பெண்ணும் வந்தார்கள். இருவரும் கலினின்கிராத் நகரில் பணிபுரியும் விமானப் பணிப்பெண்கள். ரவுல்துகினின் காதலி அவரது தோழியையும் துணைக்கு அழைத்து வந்திருந்தார். தோழியின் பெயர் லூத்மிலா ஷெக்ரெத்னீவா. அடக்கமாக உடையணிந்து டிக்கெட்டுகளுடன் நுழைவாயில் படிகளில் காத்திருந்த வலோத்யாவுடன் அறிமுகமானார்கள். பிறகு நால்வருமாக நிகழ்ச்சிக்குச் சென்றார்கள்.

இடைவேளையின் போது உணவகம், மீண்டும் நிகழ்ச்சி என்று பரபரப்பாகக் கழிந்தது அன்றைய நாள். நண்பர்களான வலோத்யாவும் லூத்மிலாவும் ரவுல்துகின் ஜோடியைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொண்டார்கள். மூன்று நாள் விடுமுறையில் வந்திருந்ததால், அடுத்தடுத்த நாள்களிலும் சேர்ந்தே நேரத்தைச் செலவழிக்கத் திட்டமிட்டார்கள். இசைக்கச்சேரி, திரையரங்கங்கள் என வலோத்யாவின் தொடர்புகள் மூலம் டிக்கெட்டுகள் கிடைத்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!