195. ரேபரேலி விஜயம்
மேனகா காந்தியின் அப்பா கர்னல் ஆனந்த்தின் திடீர் மரணம் இந்திரா காந்தி குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மரணம் நிகழ்ந்த சூழ்நிலை, வேண்டாத பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
ஆனால் கர்னல் ஆனந்த் திடமான மனநிலை கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்பு கூட ஒருமுறை அதிக எண்ணிக்கையில் மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஒரு தகவல் உண்டு.
இருந்த போதிலும் ‘கர்னல் ஆனந்தைக் கொலை செய்துவிட்டு, அதைத் தற்கொலை போல நாடகமாடி இருக்கிறார்கள்’ என்று சொன்னதோடு அதற்கு ஒரு காரணமும் கற்பிக்கப்பட்டது.
ஷா கமிஷன் விசாரணைக்கு அழைப்பு வந்தால் சஞ்சய் காந்தியைப் பற்றிப் பல ரகசியங்களை அவர் சொல்லிவிடுவதாக இருந்தார். அதற்கு வாய்ப்பே இல்லாமல் அவரைக் கொன்று, தற்கொலை போலச் சித்தரித்துவிட்டார்கள்’ என்றும் சொன்னார்கள்.















Add Comment