ராம் ஶ்ரீராம்
1998ஆம் ஆண்டு. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களான லேரி பேஜ்ஜும், செர்ஜி பிரின்னும் தங்களுடைய திட்டத்திற்காக முதலீட்டாளர்களைத் தேடிக்கொண்டிருந்தனர்.
சன் மைக்ரோசிஸ்டத்தின் இணை நிறுவனரும் நண்பருமான ஆண்டி பெக்டோல்ஷைம் மூலமாக ராம் ஸ்ரீராம் அவர்கள் இருவரையும் சந்தித்தார். அப்போது அவர்கள் ஒரு சிறிய கார் நிறுத்துமிடத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர் என்பது உலகமறிந்த செய்தி.
அவர்களுடைய தேடுபொறி தொழில்நுட்பம் மிகச் சிறப்பாக இருந்ததை முதல் சந்திப்பிலேயே புரிந்துகொண்ட ஸ்ரீராம், அவர்களுடைய திட்டத்துக்கு நிதியுதவி செய்யும் முடிவை எடுத்தார். அவர்கள் இருவரும் மிகச் சிறந்த மென்பொருள் பொறியாளர்கள் என்பதில் அவருக்குச் சந்தேகம் இருந்ததில்லை. அவர்கள் இந்த உலகத்தையே ஒரு தரவுத் தளமாகப் பார்த்தார்கள். இந்தப் பார்வைதான் அவரை முதலீடு செய்யும் முடிவை நோக்கி உந்தியது.









Add Comment