Home » திசையெலாம் தமிழர் – 13
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 13

வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

2009ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். பரவலாக வெங்கி ராமகிருஷ்ணன் என்று அறியப்படும் இவர் தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவர். தந்தையும் தாயாரும் அறிவியல் அறிஞர்களாகவும் பேராசிரியர்களாகவும் பணி செய்தவர்கள்.

வெங்கி பிறந்ததற்குப் பிறகு அவருடைய பெற்றோர் மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் சென்றுவிட, அவருடைய பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய பிறகு வெங்கியின் தந்தை சி.வி. ராமகிருஷ்ணன், குஜராத்தில் உள்ள தற்போது வடோதரா எனப்படும் பரோடாவுக்குப் பணி நிமித்தமாகச் செல்ல நேர்ந்தது. எனவே குடும்பத்துடன் அங்கு இடம்பெயர்ந்தனர்.

பரோடாவில் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறையினைத் தொடங்கியவர் வெங்கியின் தந்தை. வெங்கியின் தாயார் ராஜலக்ஷ்மியும் கணவரோடு சேர்ந்து அங்கு பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். வெங்கியின் சகோதரியும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!