1. உரிமைக் குரல்
உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நம்முடையது.
மக்களாட்சி என்றால், மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளுதல், இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அவர்களை ஆளுதல்.
இருபது வீடுகளைக் கொண்ட நம்முடைய அடுக்ககத்தின் தலைவர், செயலாளர், பொருளாளரில் தொடங்கி நகராட்சி உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், முதலமைச்சர், பிரதமர் என்று நம்மை ஆள்கிற எல்லாரும் ஏதோ ஒருவிதத்தில் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். அதனால், அவர்கள் நமக்காகக் குரல் கொடுப்பார்கள், அவர்கள் சேர்ந்து இயற்றுகிற சட்டங்களும் விதிமுறைகளும் நம்முடைய நலனைப் பாதுகாக்கும் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
மக்களாட்சியில் பிறந்து, வளர்ந்த நமக்கு இது ஒரு பெரிய விஷயமா என்று தோன்றலாம். ‘என்ன பெரிய மக்களாட்சி? நம்மைச் சுரண்டப்போறவங்க யாருன்னு நாமே தேர்ந்தெடுக்கறோம். அவ்வளவுதானே?’ என்று சிலர் கேலிகூடச் செய்யலாம். ஆனால், நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல, மக்களாட்சியின் அருமையைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் நாம் சுமார் ஒன்றரை நூற்றாண்டு பின்னோக்கிச் செல்லவேண்டும்.










Add Comment