2. ராஸ்தே
வேளணேஸ்வர்.
கோபால கிருஷ்ண கோகலேவின் முன்னோர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்துவந்த கிராமத்தின் பெயர் இதுதான். இன்றைய மகராஷ்டிர மாநிலத்திலிருக்கும் கடலோரக் கிராமம் இது.
இந்தக் குடும்பத்தில் பிறந்த பாலாஜி மகாதேவ் கோகலே என்கிற துடிப்பான மனிதருக்கு வேளணேஸ்வரில் கிடைத்த வாய்ப்புகள் பிடிக்கவில்லை, அல்லது, போதவில்லை. அதனால், இன்னும் சிறப்பான வாய்ப்புகளைத் தேடி அங்கிருந்து வெளியேறினார் அவர்.
பொதுவாகக் கிராமத்திலிருந்து இடம் பெயர்கிறவர்கள் பக்கத்திலிருக்கிற நகரத்தில் குடியேறுவார்கள். ஆனால், பாலாஜி மகாதேவ் ஒரு புதிய கிராமத்தையே உருவாக்கினார். அதன் பெயர் தாம்மண்மலா.
அன்றைய வழக்கத்தின்படி, இதுபோல் புதிதாக உருவாக்கப்படும் கிராமங்களுக்குக் ‘கோத்’ (Khot) என்ற பெயரில் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படுவார். இவருடைய வேலை, அங்கிருக்கும் நிலங்களைப் பயன்படுத்துகிறவர்களிடமிருந்து வாடகையைத் திரட்டுவது.










Add Comment