33. மரபுவாதிகள், சீர்திருத்தவாதிகள்
அரசியல் விடுதலையா அல்லது சமூகச் சீர்திருத்தமா என்பது திலகருக்கும் ஆகர்கருக்கும் நடுவிலான சண்டை மட்டுமில்லை. அன்றைய புணே அறிவாளிகள் வட்டத்தையே இந்தக் கேள்வி இரண்டாகப் பிளந்திருந்தது.
ஒரு பக்கம் திலகரும் அவருடைய தோழர்கள், தொண்டர்களும் மரபான நம்பிக்கைகளை வலியுறுத்தினார்கள், சீர்திருத்தங்களைப் எதிர்த்தார்கள், அல்லது, அவை அவ்வளவு முதன்மையானவை இல்லை என்று புறக்கணித்தார்கள், சீர்திருத்தம் பேசுவோரை, அவர்களுடைய முன்னெடுப்புகளைக் கேலி செய்தார்கள், அவர்கள் அரசியல் களத்தில் வெளிச்சம் பெறாதபடி தடுக்கத் தங்களால் இயன்றதையெல்லாம் செய்தார்கள். இந்தப் பிரிவினர் ‘மரபுவாதிகள்’ (The Orthodox Party) என்று அழைக்கப்பட்டார்கள்.
இன்னொரு பக்கம் ரானடே, ஆகர்கர் தலைமையிலான ‘சீர்திருத்தவாதிகள்’ (The Reformers) பல்வேறு சமூக மாற்றங்களுக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இந்தப் பிரிவின் இளம் தலைவராகக் கோகலே விரைவாக வளர்ந்துகொண்டிருந்தார்.










Add Comment