Home » ஆசான் – 64
ஆசான் நாள்தோறும்

ஆசான் – 64

64. இளைஞர் படை

பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் உள்ள இந்தியா முன்னேறவேண்டும், நிறையக் கற்றுக்கொள்ளவேண்டும், அதன்மூலம் தன்னைத் தானே ஆள்வதற்குத் தகுதி பெறவேண்டும் என்றெல்லாம் இந்தியர்கள் கனவு காண்கிறார்கள். ஆனால், இந்த முன்னேற்றத்துக்கு யார் பொறுப்பு? யார் அதற்காக வேலை செய்வார்கள்?

காங்கிரஸ்தான் பொறுப்பு என்றால், அது ஆண்டுக்கு ஒருமுறை மூன்று நாட்கள்மட்டும் கூடிப் பேசிவிட்டுப் பிரிந்துவிடுகிற கட்சியாக இருக்கிறது. மீதியிருக்கிற 362 நாட்களில் அந்தக் கட்சியின் சார்பாக நாடு முழுவதும் எந்தப் பெரிய வேலைகளும் நடப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுப் பற்றுள்ளவர்கள்தான். ஆனால், அவர்களும் தங்களை நாட்டுக்காக முழுமையாக ஒப்படைத்துவிடுவதில்லை, தங்களுடைய மற்ற வேலைகளைச் செய்தபடி, மீதமிருக்கிற ஓய்வு நேரத்தில்தான் நாட்டுப் பணியில் ஈடுபடுகிறார்கள். அதைத் தவறு என்றும் சொல்லமுடியாது. எல்லாருக்கும் வீடு, குடும்பம், தொழில், மற்ற கடமைகள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு எப்போதும் நாட்டைப்பற்றியே சிந்திக்கவேண்டும் என்று அவர்களை யார் வற்புறுத்தமுடியும்?

மிக இளம் வயதிலேயே நாட்டுப் பணிக்கென்று தன்னை ஒப்படைத்துவிட்ட கோகலே இதைப்பற்றி அடிக்கடி சிந்திப்பதுண்டு. இத்தனைப் பெரிய நாட்டை முன்னேற்றுவதற்கு ஒரு கோகலே, அல்லது, பத்துப் பதினைந்து கோகலேக்கள் போதுமா? அக்கறையுள்ள ஊழியர்கள் நாடு முழுவதும் உருவாகி, மக்களுக்காகப் பாடுபட்டால்தானே நாடு சரியான திசையில் வளரும்? வேறு சிந்தனையின்றி நாட்டுக்காகமட்டும் உழைக்கப்போகிற அந்த ஊழியர்களை எங்கிருந்து கண்டுபிடிப்பது? எப்படிப் பயிற்சி கொடுப்பது? இதையெல்லாம் யார் செய்வார்கள்? இப்படி அவருக்குள் பல கேள்விகள் உருண்டுகொண்டிருந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!