72. மிதவாதம், தீவிரவாதம்
1906ம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் ஜார்ஜ் ஃப்ரெடரிக் எர்னெஸ்ட் ஆல்பர்ட் (பின்னாட்களில் ஐந்தாம் ஜார்ஜ் அரசர் என்ற பெயரில் பிரிட்டிஷ் பேரரசை ஆண்டவர்) இந்தியாவுக்கு வருவதாக இருந்தது. அவரை இந்திய மக்கள் சார்பில் வரவேற்கும்வகையில் பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவிருந்தது.
ஆனால், ஆங்கிலேயர்களை இனிமேலும் நம்புவதற்கில்லை என்று நினைத்தவர்கள், அவர்களை எதிர்த்துச் சாலையில் இறங்கிப் போராட விரும்பியவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அவர்கள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்தார்கள்.
மாநாட்டுத் தலைவரான கோகலே திகைத்துப்போனார். இளவரசரை இங்கு வரக்கூடாது என்று எதிர்ப்பதன்மூலம் நாம் பெறப்போவது என்ன? நாம் எதிர்ப்பதால் அவர் வராமல் இருந்துவிடப்போகிறாரா? இதுபோன்ற சிறு விஷயங்களில் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்துப் போனால்தானே நாம் பெரிய விஷயங்களைப்பற்றி அரசாங்கத்திடம் தொடர்ந்து உரையாடமுடியும்?










Add Comment