80. சுருக்கமும் அழுத்தமும்
1912 அக்டோபர் 22 அன்று, கோகலே கேப் டவுன் துறைமுகத்தில் வந்திறங்கினார். அடுத்த நான்கு வாரங்கள் அவர் தென்னாப்பிரிக்காவில் தங்கினார். இந்த ஒரு மாதமும் அவர் எப்போது எங்கு செல்லவேண்டும், யாரைப் பார்க்கவேண்டும், எதைப்பற்றிப் பேசவேண்டும் என்கிற ஒட்டுமொத்தத் திட்டத்தையும் காந்தி மிகக் கவனமாக உருவாக்கியிருந்தார்.
ஆனால், காந்தியின் திட்டத்தில் ஒரு மிகப் பெரிய ஓட்டை இருந்தது. கோகலேவின் உடல்நலத்தை அவர் கருத்தில் கொள்ள மறந்திருந்தார். அதனால், பயணங்கள், சந்திப்புகள், கூட்டங்கள் என்று ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நிரப்பியிருந்தார்.
கேப் டவுனில் கோகலேவைப் பார்த்ததும், காந்திக்குத் தான் செய்த தவறு புரிந்தது. ஒரு பெரிய தலைவர் வந்திருக்கிறார் என்பதற்காக அவரை விருப்பம்போல் போட்டுப் பிழியாமல் அவருடைய உடல்நலத்தை மனத்தில் கொண்டு மொத்தத் திட்டத்தையும் மாற்றியமைக்கவேண்டும், தேவையில்லாத நிகழ்ச்சிகளை வெட்டி ஒழுங்குபடுத்தவேண்டும் என்று தீர்மானித்தார்.









Add Comment