தர்மன் சண்முகரத்னம்
2023, செப்டம்பர் 14.
சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் தமிழர்கள் பெருமை கொள்ளக்கூடிய ஒரு சம்பவம் அரங்கேறியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் பதவிப் பிரமாணம் செய்துவைக்க, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார்.
இருபத்திரண்டு வருடங்களாக சிங்கப்பூர் அரசியலில் திறம்படச் செயல்பட்டவர் தர்மன் சண்முகரத்னம். 2023ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் முதலில் ஆறு பேர் களத்தில் இருந்தனர். அவர்களில் மூன்று பேர் போட்டியிடத் தகுதியிழந்தவர்கள் என அறிவிக்கப்பட்டதும் அது மும்முனைப் போட்டியாக மாறியது.
இங்க் கொக் சாங்க், டான் கின் லியோன் என்ற இரண்டு சீனர்களை எதிர்த்து ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் (People’s Action Party) ஆதரவோடு களத்தில் நின்றார் தர்மன். உண்மையான சிங்கப்பூர்க்காரருக்கு வாக்களியுங்கள் எனத் தர்மனுக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. உண்மையில் சிங்கப்பூர் மக்கள் அப்படியெல்லாம் பாகுபாடு பார்ப்பவர்கள் அல்லர். எல்லா இனத்தவர்களும் இணக்கமாக வாழ்கிற நாடு என்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு வாய்த்தது.










Add Comment