Home » நீ வேறு, நான் வேறு – 24
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 24

24. சிந்தனை செய் மனமே!

சுதந்தரத் தனி நாடாகவே இருப்பது, இரானோடு சேருவது, ஆப்கனிஸ்தானுடன் சேருவது, வேறு வழியே இல்லாது போனால் பாகிஸ்தானுடன் பேரம் பேசி, அதன் ஆளுமைக்குள் தனது முடியாட்சி அந்தஸ்தைத் தக்க வைக்கப் பார்ப்பது என்று கலாட்டின் மன்னர் நான்கு திட்டங்கள் வைத்திருந்ததை ஏற்கெனவே பார்த்தோம். எண்ணிப் பார்த்தால் மிர் அஹ்மத்யார் கான் என்கிற அம்மனிதர் எவ்வளவு அப்பாவியாக இருந்திருக்கிறார் என்கிற பரிதாப உணர்வே யாருக்கும் முதலில் வரும். அன்றைய தேதியில் (அதாவது 1947ஆம் ஆண்டின் தொடக்கம்) மாறிக்கொண்டே இருந்த காட்சிகளின் வேகத்துடன் ஒப்பிட்டால் அவரது முதல் மூன்று திட்டங்களும் பள்ளிக்கூட நாடக மேடைகளுக்குக் கூடச் சரிப்பட்டு வராது என்று அவருக்கே தோன்றிவிட்டது. அவர் முன்னால் இருந்தது இரண்டே சாத்தியங்கள்தாம். ஒன்று பலூசிஸ்தானைப் பாகிஸ்தானுடன் இணைத்துவிட வேண்டும். அல்லது இந்தியாவுடன் இணைத்துவிட வேண்டும். இதற்கு அவர் யாரிடமும் ஒப்புதல் கேட்க அவசியமில்லை. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அன்றைய இந்திய சமஸ்தானங்கள் அனைத்துக்கும் அளிக்கப்பட்டிருந்தன.

கானின் பிரச்னை, அவர் மேற்படி இந்திய சமஸ்தானங்களுள் ஒன்றை நிர்வகிப்பவர் அல்லர் என்பதுதான். எனவே அவருக்கு இரண்டு சாத்தியங்கள் கிடையாது. ஒன்றே ஒன்றுதான். பாகிஸ்தானுடன் இணைவது. இந்த பிரிட்டிஷ்காரர்கள் எதையாவது ஒன்றை வாயைத் திறந்து பேசினால் பரவாயில்லை. அதுவும் மாட்டேனென்கிறார்கள். வேறு யாரிடம் போய்ப் பேசுவது? என்ன பேசுவது?

சுதந்தரத்துக்கு முன்பு இடைக்கால அரசுகள் ஏற்படுத்தப்பட்டன. அதாவது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுப் புறப்பட வேண்டுமல்லவா? அதற்கு ஓர் அரசு. இந்தியாவுக்கு ஒன்று. பாகிஸ்தானுக்கு ஒன்று. பாகிஸ்தான் இடைக்கால அரசின் தலைவராக (கவர்னர் ஜெனரலாக) முகம்மது அலி ஜின்னா எதிர்பார்த்தாற்போல நியமிக்கப்பட்டார். கலாட் மன்னரின் முதலும் கடைசியுமான நம்பிக்கை அவர்தாம். எப்படியாவது ஜின்னா கலாட்டின் தனி நாடு அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொடுத்துவிடுவார் என்று அக்கணம் வரை அவர் நம்பிக்கொண்டிருந்தார். ஆனாலும் அச்சம் இல்லாமல் இல்லை.

அச்சத்தின் காரணம், அதுவரை அடிக்கொரு தரம் பேசிக்கொண்டிருந்த ஜின்னா 1947 பிறந்த பிறகு கலாட் மன்னருடன் அவ்வளவாகப் பேச்சு வைத்துக்கொள்ளவில்லை. பத்து முறை அழைத்தால் ஒருமுறை பதில் சொல்வார். ‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லிங்க. பாத்துக்கலாம்’ என்ற தொனியில் நாலு வரி பேசிவிட்டு வைத்துவிடுவார்.

மறுபுறம் சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து பாகிஸ்தானுடன் இணைக்கும் முயற்சியில் அவர் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக மூவர் குழு ஒன்றை அமைத்து அதைத் தானே வழிநடத்தவும் செய்தார். அவருக்கு இருந்த உச்சக்கட்டக் குடைச்சல் உலகறிந்தது. காஷ்மீர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!