Home » இரும்புக் கை மாயாவினி
ஆளுமை

இரும்புக் கை மாயாவினி

டில்லி லாக்கி

டில்லி லாக்கி, இருபது வயது நிரம்பிய பிரிட்டிஷ் இளம்பெண். மேற்குலகச் சமூக ஊடகங்களில் அதிகப் பரிச்சயம் இருப்பவர்களுக்கு இப்பெண்மணி முன்பே அறிமுகமாகி இருக்கலாம். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ‘நீயா நானா’ கோபிநாத். அதுவும் நம் திருக்குறளைக் கொண்டு, ‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்று அறிமுகப்படுத்துகிறார்.

டில்லியும் மற்ற குழந்தைகளைப் போன்று ஆரோக்கியமாகவே பிறந்தாள். அவளின் மூன்று சகோதரிகளைப் போல் அவளும் சாதாரணமாகவே இருந்தாள், முதல் பதினைந்து மாதங்கள் வரை. அன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியாகவே ஆரம்பித்தது. அன்றுதான் டில்லி ‘அன்று துளிர்த்த தளிரினை’ போன்ற தன் பாதங்களால் முதல் அடி எடுத்துவைத்தாள். இரவு சகோதரியுடன் தூங்கச் சென்றாள்.

மறுநாள் அதிகாலை அவள் சற்றே சிணுங்கினாள். அவளைப் பரிசோதித்த தாயார் சாரா, அவளுடைய உடல் சூடு அதிகமிருப்பதை உணர்ந்தார். மருந்து கொடுத்தார். அவளிடமிருந்து மீண்டும் வந்த சிணுங்கல் அம்மருந்து வேலை செய்யவில்லை என்பதை உணர்த்தியது. அருகிலிருந்த மருத்துவரை முதலில் அணுகினார்கள் . அவரும் அவளைப் பரிசோதித்துவிட்டு, காதில் நோய்த்தொற்று என்றெண்ணினார். முப்பத்தாறு மணிநேரத்தில் சரியாகிவிடும் என்று மருந்து கொடுத்து அனுப்பிவிட்டார். நாள் முழுவதும் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!