இரண்டு வாரங்களாக அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கும் இரானுக்கும் போர் நடந்து வருகிறது. போரின் ஒரு பகுதியாக – மிக முக்கியமான பகுதியாக இஸ்ரேல் ராணுவம், இரானின் தெஹ்ரான் எண்ணெய்க் கிடங்கைத் தாக்கியது. மார்ச் 8 ஆம் தேதி இது நடந்தது.
இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையமான ஹைஃபா மீது இரான் தாக்குதல் நடத்தியது. அதுமட்டுமின்றி, அண்டை நாடான அமீரகத்தின் சுத்திகரிப்பு நிலையங்களின் மீதும் தாக்குதல் தொடுத்தது. எரியத் தொடங்கிய எண்ணெய்க் கிணறுகள் கரிய புகையை வெளியேற்றியவாறு உள்ளன. அங்கிருந்து வெளியேறும் ஹைட்ரோகார்பன் துகள்களால் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது இரானை மட்டுமின்றி அண்டை நாடுகளான துருக்கி, பாகிஸ்தான் மற்றும் இந்தியா வரை கூட பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.















Add Comment