Home » நீ வேறு, நான் வேறு – 25
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 25

25. கையெழுத்தும் தலையெழுத்தும்

நீங்கள் ஒரு பெட்டிக் கடைக்கோ, பிளாட்பாரக் கடைக்கோ போகிறீர்கள். காய்கறியோ, பழங்களோ ஏதோ ஒன்று விற்கும் கடை. நெடுநேரம் பேரம் பேசுகிறீர்கள். இறுதியில் கடைக்காரர் வெறுத்துப் போய், ‘வேணுமா? வேணாமா?’ என்று கேட்கிறார் என்று வையுங்கள். என்ன செய்வீர்கள்?

வேண்டும் என்றால் காசைக் கொடுத்துவிட்டு வாங்கிக்கொள்வீர்கள். வேண்டாம் என்றால் நகர்ந்துவிடுவீர்கள். கடைக்காரர் அடுத்த வாடிக்கையாளரைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார். அவ்வளவுதானே? எனக்கு இன்றைக்கு வேண்டாம்; ஆனால் நாளை ஒருவேளை உன் கடையில் நான் வாங்க வரலாம். அப்போது நான் கேட்பதை, கேட்கும் விலைக்குக் கொடுக்க வேண்டும் என்று நீங்களும் சொல்லப் போவதில்லை; சொன்னால் கடைக்காரரும் பொருட்படுத்தப் போவதில்லை.

அல்லவா? இதை மனத்தில் இருத்தி, ஜின்னாவின் அந்தத் தாற்காலிக ஒப்பந்தத்தைச் சற்று சிந்தித்துப் பார்க்கலாம். பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் இருக்கிறது; இணைகிறேன். இது நேரடி பதில். சட்டபூர்வமாக்குவதற்காக ஒப்பந்தம், கையெழுத்து இன்ன பிற. அதில் பிழையில்லை, பிசிறில்லை. ஆனால் அந்த இரண்டாவது ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

இப்போது என்னால் அவசரத்தில் முடிவெடுக்க முடியவில்லை. சிறிது அவகாசம் கொடுங்கள். பிறகு யோசித்து முடிவைச் சொல்கிறேன்.

இதுதான் சாரம். இதற்கு எதற்கு ஒப்பந்தம்? பிறகு யோசித்து, பாகிஸ்தானுடன் இணைவதே சரி என்ற முடிவுக்கு ஒரு மன்னர் வருவாரானால் அது அவரது விருப்பம். ஜின்னாவுக்கும் விருப்பம் இருந்தால் சேர்த்துக்கொள்ளப் போகிறார். மேற்படி மன்னர் இந்தியாவுடன் சேரலாம் என்று நினைத்து, இந்தியாவும் ஒப்புக்கொள்ளுமானால் அதுவும் சரி. இரண்டில் ஒன்றுதான்; மூன்றாவதாக ஏதுமில்லை என்பது அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த 562 சமஸ்தானங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய விதி. பலூசிஸ்தான் அந்தப் பட்டியலில் இல்லை. இதை பிரிட்டிஷ் அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. ஜின்னாவுக்கும் தெரியும். ஆனாலும் அவர் அதைச் செய்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!