Home » நீ வேறு, நான் வேறு – 31
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 31

31. ஒன்று என்பது ஒன்றல்ல.

பலூச்சிகளுக்கும் பாகிஸ்தானி பஞ்சாபிகளுக்கும் ஏழாம் பொருத்தம் என்று ஏற்கெனவே பார்த்தோம் அல்லவா? அதற்குப் பல காரணங்கள் உண்டென்றாலும் அடிப்படையில் ஒரு கொலைவெறி விரோதபாவம் இருக்கிறது. பாகிஸ்தானிய பஞ்சாபி அரசியல்வாதிகள் மரபணு அளவிலேயே விஷமப் பிரியர்கள். எங்காவது எதையாவது யாரையாவது சீண்டிவிட்டு, அவர்கள் காச்மூச்சென்று கத்தத் தொடங்கும்போது சற்றுத் தள்ளிச் சென்று கைகட்டி நின்று ஒன்றுமே தெரியாதது போல சமர்த்தாக வேடிக்கை பார்ப்பதில் விருப்பம் கொண்டவர்கள். இந்தக் கைங்கர்யத்தை அவர்கள் பலூச்சிகளிடம் மட்டும்தான் நிகழ்த்துவார்கள் என்றில்லை. வட மேற்கு எல்லைப்புற மாகாணத்து ஆதிவாசிகளுடன் செய்வார்கள். கண்காணாத தொலைவில் தங்கள் தலையெழுத்தை எண்ணி முனகியபடி அன்றைக்கு வாழ்ந்துகொண்டிருந்த கிழக்கு வங்காளத்து முஸ்லிம்களுக்கும் செய்வார்கள். அந்த வகையில் பாரபட்சமில்லாத பரோபகாரிகள்.

1955 ஆம் ஆண்டு அவர்கள் செய்த இந்த ரகப் பரோபகாரம் ஒன்று பலூசிஸ்தானில் வசித்து வந்த அத்தனை மக்களையும் ரத்தம் கொதிக்கப் பொங்கி எழச் செய்தது. தனி நாடாக இருந்த கலாட்டை பலூசிஸ்தான் மாகாணமாக்கியதையே அவர்களால் ஜீரணிக்க முடியாதிருந்தது. இந்நிலையில், பலூசிஸ்தான் இனித் தனி மாகாணமும் அல்ல; மேற்கு பாகிஸ்தானின் ஓர் அங்கம், அவ்வளவுதான் என்று அன்றைய பாகிஸ்தான் ஜனாதிபதி இஸ்கந்தர் மிஸ்ரா அறிவித்தார்.

முன்னதாக, 1954 ஆம் ஆண்டு நிர்வாக வசதி கருதி பாகிஸ்தானை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். இன்றைய பாகிஸ்தான் ஒரு பகுதி. இன்றைய பங்களாதேஷும் அன்றைய கிழக்கு பாகிஸ்தானுமாக இருந்த நிலப்பரப்பு இரண்டாவது பகுதி.

மேலோட்டமாகப் பார்த்தால் அன்றைய சூழ்நிலையில் இது சரியான ஏற்பாடு என்றே தோன்றும். ஆனால் சரியானதல்ல. எப்படி என்று சிறிது விளக்கமாகப் பார்த்துவிடலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!