Home » நீ வேறு, நான் வேறு – 59
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 59

59. வேறு முகம்

பலூசிஸ்தானில் வசிக்கும் பலூச்சி இனத்தவர் அல்லாத அனைவரையும் ஒழித்துக்கட்டுங்கள் என்று அறைகூவல் விடுத்தவர் பிரஹும்தாஹ் புக்தியாக இருக்கலாம். பலூசிஸ்தானில் இயங்கிக்கொண்டிருந்த பல்வேறு சிறிய ஆயுதக் குழுக்கள் அந்தப் பணியில் சிறிதளவு ஈடுபட்டிருக்கலாம். ஆனால் எப்போது பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) அதைத் தனது செயல் திட்டங்களுள் ஒன்றாகக் கையில் எடுத்ததோ, அப்போது சிக்கல் பெரிதாகிப் போனது.

ஒப்பீட்டளவில் BLAவுக்கு ஆள் பலம் அதிகம். ஆயுத பலம் அதிகம். பெரிய அளவில் அவர்களிடம் நவீன ஆயுதங்கள் கிடையாது என்றாலும் இதர இயக்கங்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கிகளைவிடச் சற்று உயர்ந்த தரத்தில் அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தார்கள். என்னதான் சோவியத் இல்லை, ரஷ்யப் புரவலர்கள் இல்லை என்றாலும் இயங்கத் தொடங்கிய ஒன்பதாண்டுகளில் BLAவுக்குக் கணிசமான அளவில் வெளிநாடு வாழ் பலூச்சிகளின் ஆதரவு கிடைத்திருந்தது. பலூச்சிகள் என்றில்லை. பாகிஸ்தானைப் பிடிக்காத அனைத்துத் தரப்பிலிருந்தும் ஏதோ கொஞ்சம் நிதி வரத்து இருக்கத்தான் செய்தது. இல்லை, இல்லை என்று இக்கணம் வரை மறுத்துக்கொண்டிருந்தாலும் இந்திய-ஆப்கன் அரசுகளின் ஆதரவு தனி. எனவே, அவர்கள் என்ன திட்டமிடுகிறார்களோ அதைச் சரியாகச் செய்து முடிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.

மே மாதம் 2009 ஆம் வருடம் BLA, பலூசிஸ்தானில் வசிக்கும் பஞ்சாபிகளைக் குறி வைத்தது. கவனியுங்கள். நிறுவனங்கள் அல்ல. அரசு அலுவலகங்கள் அல்ல. ராணுவமல்ல. உயரதிகாரிகள் அல்ல. பலூசிஸ்தானில் பணி நிமித்தம் வந்து, வீடு வாசல் குடும்பம் குட்டியுடன் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டிருந்த சாதாரண மக்கள். அவர்கள் பஞ்சாபிகள். அவ்வளவுதான் வித்தியாசம். அடித்தட்டுத் தொழிலாளிகள் முதல் உயரதிகாரிகள் வரை அவர்களில் எத்தனையோ சமூகப் படிகளில் வசிப்போர் உண்டு. BLA அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. நீ பஞ்சாபியா? ஒன்று ஓடிவிடு. அல்லது இறந்துவிடு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!