Home » நீ வேறு, நான் வேறு – 61
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 61

61. நீண்ட பெரும் பாதை

பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாற்றில் 2015 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான புள்ளி. அதற்கு முன்பு பலூச்சிகள் அறிந்ததெல்லாம் பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர்கள், பாகிஸ்தானின் ஜனநாயக ஆட்சியாளர்கள், பாகிஸ்தானின் சுரண்டல், பாகிஸ்தானின் துரோகங்கள். இதற்கு அப்பால் ஒன்றுமில்லை. அவர்கள் தமக்குத் தெரிந்த ஆயுத வழிகளில் பாகிஸ்தானுக்கு பதிலளித்து வந்தார்கள். நடுநடுவே பங்காளிச் சண்டைகள், இனக்குழுச் சண்டைகள், இயக்கங்களுக்குள்ளே பிரிவினை, புதிய இயக்கங்கள் உருவாகுதல், புதிய கட்சிகள் பிறப்பது, பிறக்கிற புதிய அமைப்பு எதுவானாலும் பொது எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடுவது, போரிடுவது. கட்டுசெட்டாகக் குடும்பம் நடத்துவது என்றால் என்னவென்று தெரியும் அல்லவா? அதைப் போல அவர்கள் கட்டுசெட்டாகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். 2015 ஆம் ஆண்டு பலூச்சி இயக்கங்கள் சற்றும் எதிர்பாராத விதமான ஒரு பெரிய திருப்பம் பாகிஸ்தானில் உண்டானது. அது. சீனாவுடனான வர்த்தக உறவுகளின் விரிவாக்கத் திட்டங்கள்.

தொடக்கம் முதலே சீனா பாகிஸ்தானின் நட்பு நாடு. ஏன் நட்பு, எதனால் நட்பு என்றெல்லாம் கேட்கக் கூடாது. அது நட்புதான். சீனாவுக்கு இந்தியாவுடன் ஆகாது. எனவே இந்தியாவுக்கு ஆகாத பாகிஸ்தானுடன் என்ன வேண்டுமானாலும் ஆகும் என்கிற எளிய கணக்கு போதும். சற்று நுணுக்கமாகச் சிந்திக்க முடியுமானால் இன்னொன்று புரியும். எந்தப் பணக்கார நாடு எவ்வளவு உதவிகள் செய்தாலும் பாகிஸ்தானால் எழுந்து நிற்க முடியாது. ஒரு பக்கம் அணு ஆயுதம் செய்வார்கள். இன்னொரு பக்கம் மொத்த நாடும் வறுமையில் வாடும். இதற்குக் காரணம் மிக எளிமையானது. பாகிஸ்தான் தனது நாட்டுக்கும் அதன் வளர்ச்சித் திட்டங்களுக்கும் போடும் பட்ஜெட்டுக்குச் சற்றேறக் குறைய சம அளவிலேயே ராணுவத்துக்கும் நிதி ஒதுக்கும் நாடு. சில வருடங்களில் ராணுவ பட்ஜெட் எல்லை மீறியும் போயிருக்கிறது. காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஊட்டச் சத்து மாத்திரைகள் அளிப்பதற்கே அவர்கள் தனியாக உழைத்துச் சம்பாதிக்க வேண்டும். காஷ்மீரை முன்னிட்டுச் செலவிடும் தொகைக்குச் சற்றும் குறையாத அளவுக்கு பலூசிஸ்தானுக்கும் செலவாகும். இதெல்லாம் ஏன், எதற்கு என்ற கேள்விக்கே இடமில்லை. இதெல்லாம் இல்லாவிட்டால் பாகிஸ்தான் இல்லை. அவ்வளவுதான்.

என்ன கொடுத்தாலும் போதாத நிலையிலேயே எப்போதும் இருக்கும் ஒரு நாட்டில் வளங்களும் இருக்குமானால் மேற்படி ‘நட்பு’ நாடு பதிலுக்கு என்ன எடுக்கலாம் என்றுதான் பார்க்கும். பாகிஸ்தானால் என்ன கொடுக்க முடியும்? வளங்கள்தானே? அதனால் பரவாயில்லை. நீ எடுத்துக்கொள். எனக்குக் கப்பம் கட்டிவிட்டு எடுத்துச் செல். முடிந்தது கதை. காசா பணமா? வளமெல்லாம் பலூசிஸ்தானில் உள்ளவை. அங்கே போய் அள்ளிக்கொள்வதென்பது மகனே உன் சமர்த்து. துப்பிருந்தால் வெட்டி எடு. இல்லாவிட்டால் முட்டிக்கொண்டு சாவு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!