ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஆசையுடன் அணிவது தங்கம். ஆனால் நமது சோதிடர்கள் தம் ராசி விளையாட்டில் அதைச் சேர்ப்பதில்லை. பன்னிரண்டு ராசிகள் என்றால் ராசிக்கொரு கல். ராசிக்கல் மோதிரம் அணிந்தால் நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் கல் வியாபாரிகளின் முதலீடாகிறது.
“ஐயா, வாங்க ! அம்மா, வாங்க ! ராசிக்கல் மோதிரம் போட்டா உங்கக் குடும்பப் பிரச்சனை தீரும், செல்வச் செழிப்போடு இருப்பீங்க, திருமணத்தடை நீங்கும், குழந்தை பிறக்கும்” என்று கூவிக் கூவி விற்கிறார்கள் வியாபாரிகள். மக்களும் நம்பிக்கையுடன் வாங்கிக் கைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.
Add Comment