பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டுக்குள் நம்மைத் தனிமைப்படுத்தவே அரசுகள் பெரும்பாடுபட்டன. கடுமையான சட்டங்கள் மூலம் தன் நாட்டையும் மக்களையும் வடகொரியா தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது. கெடுபிடிகளை மீறித் தென்கொரியாவின் படங்களைப் பார்த்தார்கள், பாப் இசையைக் கேட்டார்கள் என்று பதின்ம வயது இளைஞர்கள் இருவருக்கு பன்னிரெண்டு வருடக் கடுங்காவல் தண்டனை விதித்த வீடியோ ஒன்று செய்திகளை ஆக்கிரமித்துள்ளது. சில நாள்கள் முன்பு வேலூரில் இருந்து கே பாப் இசைக் கலைஞர்களைக் காண வீட்டை விட்டு வெளியேறிய எட்டாம் வகுப்பு மாணவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தது தமிழ்நாடு காவல்துறை. இளசுகள் கே பாப்பை இப்படி ஹெவியாக லைக் செய்ய வைப்பது எது என்று தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகரிக்கிறது.
தூங்கி எழுந்தால் படுக்கை விரிப்பை மடித்து வைக்காத ஈராயிரக் குழவிகள், வேலூரில் இருந்து தூத்துக்குடிக்குச் சென்று படகு மூலம் ஆந்திராவின் விசாகப்பட்டணம் போய் அப்படியே கப்பல் ஏறி தென்கொரியா செல்ல முழு நீளத் திட்டம் வைத்திருந்ததை அறிந்து சமூகநலத்துறை ஊழியர்கள் விக்கித்துப் போனார்கள். கையில் குறைந்தளவு பணத்துடன் பாஸ்போர்ட் இல்லாமல் நாடு கடக்கத் துணிகிறார்கள். எல்லாம் தங்கள் பிரியத்துக்குரிய பிடிஎஸ் பாப் குழுவினரைக் காண.
Thanks for the news about BTS. I was wondering about the background and information about this group.
😊👍