Home » காஷ்மீர்: மீண்டும் தலையெடுக்கும் தலைவலி
இந்தியா

காஷ்மீர்: மீண்டும் தலையெடுக்கும் தலைவலி

நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஷ்மீர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. மூன்று நாள்களில் மூன்று பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்ததே இதற்குக் காரணம். கடந்த வாரம் வரை தேர்தல் பரப்புரையில் சொல்லப்பட்ட புள்ளிவிவரங்களின்படி அமைதிப் பூங்காவாக இருந்தது காஷ்மீர். மோடியின் சாதனைகளில் முதன்மையான ஒன்றாகச் சொல்லப்படடது. ஒன்றிரண்டு வாரங்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதா?

அதைத் தெரிந்து கொள்ள ‘காஷ்மீர் பயங்கரவாதிகள் வெறியாட்டம்’ என்கிற தலைப்பின் உள்ளே இருக்கும் முழுச் செய்தியையும் அறிந்து கொள்ள வேண்டும். ரெய்ஸி நகரில் நடந்தது முதல் சம்பவம். உள்ளூர் நபர்கள் சொல்வதன்படி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது இரண்டு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் இருந்து தப்பிக்க வண்டியை வேகமாகச் செலுத்திய ஓட்டுநர் நிலைதடுமாறிப் பேருந்தை விபத்துக்குள்ளாக்கினார். இச்சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர்.

அடுத்த சம்பவம் மறுநாள் கத்துவா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடந்தது. குடிக்கத் தண்ணீர் கேட்ட சிலரைப் பார்த்து சந்தேகம் கொண்ட கிராமத்தினர் தண்ணீர் கொடுக்க மறுத்து கதவை மூடிக் கொண்டனர். சத்தம் எழுப்பி உதவியும் கோரியுள்ளனர். ஆத்திரமடைந்த பயங்கரவாதிகள் வானத்தை நோக்கியும் தெருவிலும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த வழியாகச் சென்ற முதியவர் இறந்தார். காவல்துறையினர் வந்து சுமார் 19 மணி நேரம் துப்பாக்கிச் சூடு நடத்தி இரு பயங்கரவாதிகளைக் கொன்றனர். ஒரு காவலர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!