மெட்ராஸ் பேப்பர் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விழா, வழக்கம்போல எளிமையாக ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஜூன் ஒன்றாம் தேதி நடந்த இந்நிகழ்ச்சி அலங்கார, ஆரவாரங்கள் இன்றி, எழுத்தாளர்கள், வாசகர்களுடன் இணைந்து கொண்டாடும் விழாவாக இருந்தது.
நேரடியாக விஷயத்துக்கு வருவது மெட்ராஸ் பேப்பர் அடையாளங்களில் ஒன்று. தன் இனிமையான குரலில் காவ்யா தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடிய பிறகு பத்திரிகையாளர் சந்திரமெளலி தலைமையுரையாற்றினார்.
சிவகாசி பழைய பேப்பர் கடை பற்றிய தன்னுடைய முதல் கட்டுரை அனுபவத்தில் தொடங்கி அண்மையில் எழுதப்படும் தொடர் வரைக்கும் எடுத்துக்காட்டிப் பேசினார் சந்திரமெளலி. அவரது உரை இளம் பத்திரிகையாளர்களுக்குப் பல நுணுக்கமான பாடங்களைத் தரக்கூடியதாக இருந்தது.














ஜும் சந்திப்பில் நடந்த அனைத்தையும் எழுத்து வடிவில் பதிவு பண்ணிட்டீங்க… நன்று👌