ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீதான போக்ஸோ வழக்குகள் தமிழகத்தை அதிர வைத்திருக்கின்றன. மிகத் தீவிரமான இந்த விவகாரத்தில் கண்துடைப்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், இதை மூடி மறைக்கக் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
தற்போது எண்பத்து நான்கு வயதாகும் வீரமணி, ஜெம் கிரானைட்ஸ் என்ற கனிமவள நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் சென்னை மாநகரக் காவல்துறையிடம் ஒரு தன்னார்வலர் வழங்கிய பென் டிரைவில், ஒரு சிறுமியிடம் நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறல் வீடியோ இடம்பெற்றிருந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த சென்னை காவல்துறை, ஐந்து மாதங்கள் விசாரணை நடத்தியது.
















Add Comment