‘தமிழ்நாட்டில் நிலவும் மின் தடைப் பிரச்சினையைச் சரிசெய்ய அவகாசம் தேவை’ என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
சென்னை, ஆவடி, திருவண்ணாமலையின் ஆரணி, புதுக்கோட்டையின் சின்னையா சத்திரம் எனப் பட்டிதொட்டியெங்கும் தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் நீடிக்கும் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் கைக்குழந்தைகளோடு நள்ளிரவில் மின்வாரிய அலுவலகங்களையும் மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டுப் போராடும் அவலம் நீடிக்கிறது.
குடிநீர்த் தட்டுப்பாடு, குறுவை சாகுபடி பாதிப்பு ஒருபுறமிருக்க, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் சிஎன்சி இயந்திரங்களை இயக்க முடியாமலும், டீசல் ஜெனரேட்டர்களுக்குத் தாங்க முடியாத செலவு செய்தும் உற்பத்தியை இழந்து தவிக்கின்றன.
‘மின்மிகை மாநிலமாக மாற்றுவோம்’ என்று ஒவ்வொரு முறையும் வாக்குறுதி தருகிறார்கள். மின்தடை எப்போதும் போல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.















Add Comment