தமிழ்நாட்டில் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், இனி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் புறநகர்ப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் புதிய பரிமாணம் பெற்றுள்ளது. தமிழகப் பெண்களின் அன்றாடப் பயணத்தை இனிமையாக்கியிருக்கும் இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றாலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மீது பெரும் சுமையை இறக்கி வைத்துள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனியார் மோட்டார் வாகனங்கள் மூலம் சிறிய அளவில் தொடங்கப்பட்ட பேருந்துப் பயணம், காலப்போக்கில் வரைமுறையற்ற கட்டணங்களுக்கும் ஒழுங்கற்ற சேவைகளுக்கும் மத்தியில் இயங்கி வந்தது.
சுதந்தரத்துக்குப் பிறகு 1947இல் மெட்ராஸ் மாகாணத்தில் முதன்முறையாகப் பேருந்துகளை அரசுடைமையாக்கும் சிந்தனை எழுந்தது. அரசுப் பேருந்துச் சேவை தொடங்கப்பட்டாலும் அது முழு வடிவம் பெறவில்லை. 1971இல் அமைக்கப்பட்ட சோமசுந்தரம் குழுவின் பரிந்துரையை ஏற்று, தனியார் பேருந்து வழித்தடங்கள் முழுமையாக அரசுடைமையாக்கப்பட்டன.















Add Comment