Home » சட்டமன்றம் கட்டிப் பார்!
நம் குரல்

சட்டமன்றம் கட்டிப் பார்!

புதிய சட்டமன்றக் கட்டடம் கட்டப்போவதாகச் சென்ற மாதம் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு. பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடம் அதற்காகத் தேர்வு செய்யப்பட்டது. எனினும் அங்கிருக்கும் மீனவ மக்கள், எதிர்க்கட்சிகள் எனப் பலரிடமும் இருந்து தொடர்ச்சியான எதிர்ப்புகள் வந்த நிலையில், அத்திட்டத்தைக் கைவிடும் நிலையில் இருக்கிறது அரசு. வேறொரு புதிய இடத்தையும் தேடத் தொடங்கியிருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தைப் புதிய இடத்துக்கு மாற்றும் இம்முயற்சி முதன்முறை நடப்பதல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே அதற்காகத் தொடர்ச்சியான முயற்சிகள் நடந்தபடியே இருக்கின்றன. உண்மையில், இப்போது இருக்கிற புனித ஜார்ஜ் கோட்டையில் அப்படி என்ன பிரச்சனை? சட்டமன்றத்தைப் புதிய இடத்துக்கு மாற்றுவதற்காகத் தமிழகத்தை ஆண்ட அனைத்துக் கட்சிகளும் முயன்றது ஏன்?

தென் இந்தியாவில் தன் வியாபாரத்தைப் பெருக்க, கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஒரு பெரிய சேமிப்புக் கிடங்கு தேவைப்பட்டது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஃப்ரான்சிஸ் டேயின் முயற்சியால், 1644ஆம் ஆண்டு இப்போதிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. முதலில் வாணிபத்துக்காகவே பிரதானமாகப் பயன்படுத்தப்பட்டது இக்கோட்டை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!