‘கோதாவரி – காவிரி நதிகளை இணைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை இரு மாநிலங்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டும்’ என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடனான சந்திப்பின்போது தமிழக முதல்வர் விஜய் முன்வைத்த கோரிக்கை தேசிய அளவில் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
இத்திட்டத்துக்குத் தேசியத் திட்ட அந்தஸ்து வழங்கக் கோரி இரு தலைவர்களும் ஏற்கெனவே பிரதமரிடம் கூட்டாக மனு அளித்துள்ளனர். நீண்டகால நீர் பாதுகாப்புக்கு கோதாவரி–காவிரி இணைப்பு மிக முக்கியமானது என்பதில் இருவரும் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் நதிகளை இணைப்பதற்கான முயற்சிகள் நீண்ட வரலாற்றைக் கொண்டவை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தென்னிந்திய நதிகளை இணைக்கும் திட்டத்தை முதன்முதலில் முன்மொழிந்தார். உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தையும் பாசனத்தையும் விரிவுபடுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது.















Add Comment