Home » ‘கதை என்பது கைரேகை’ – நவீன்
ஆளுமை

‘கதை என்பது கைரேகை’ – நவீன்

எழுத்தாளர் நவீன்

மலேசிய எழுத்தாளர் நவீன் எழுதியிருக்கும் 19ஆவது நூலான ‘குமாரிகள் கோட்டம்’ தற்போது வெளியாகிறது. மலேசியாவில் தமிழ் இலக்கியம் சார்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் எழுத்தாளர் நவீன் மனோகரன். பேய்ச்சி, சிகண்டி உள்ளிட்ட தன் ஆக்கங்கள் மூலம் தீவிர இலக்கிய வாசகர்களின் மதிப்பைப் பெற்றவர். வல்லினம் இணைய இதழின் ஆசிரியர். பல அச்சு இதழ்களில் பணியாற்றியவர். பொறுப்பேற்று நடத்தியவர். பள்ளி ஆசிரியர். பதிப்பாளர். இளம் இலக்கிய ஆளுமை. காத்திரமான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்றவர். மலேசியாவின் முக்கியமான எழுத்தாளுமைகளைப் பற்றி இதுவரை 14 ஆவணப்படங்கள் எடுத்துள்ளார்.

மலேசியாவில் அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பத்துமலை முருகனின் உயரத்துக்கு ஏற்ற அளவில் இருந்த உண்டியலின் எதிரில் நடந்தது அந்தச் சந்திப்பு.

பதினாறு வயதில் இலக்கியம் குறித்த உங்கள் பார்வையை மாற்றியது எம்.ஏ.இளஞ்செல்வனின் சந்திப்பு. உங்கள் வாழ்வின் திருப்பு முனைப் புள்ளியாக அல்லது முதல் படியாக அமைந்த அவருடனான நட்பு பற்றிச் சொல்லுங்கள்.

தாய், தந்தை இருவரும் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள். என் அப்பா இலக்கிய வாசகர். வீட்டில் நிறைய நூல்கள் இருக்கும். எல்லாச் சஞ்சிகைகளும் இருக்கும். மலேசியாவில் வழக்கமாக வீட்டில் விகடன் குமுதம் எல்லாம் எல்லாரும் வாங்குவதில்லை. என் அப்பா அதையும் வாங்குவார். எழுதியதைப் பதிப்பித்ததில்லை என்றாலும் டயரியில் நிறைய எழுதுவார். அதைப் போல எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!