Home » நூல்வெளி நாட்டினர் – 3
நாள்தோறும் நூல்வெளி நாட்டினர்

நூல்வெளி நாட்டினர் – 3

முப்பது லட்சத்தில் ஒருவர்

நூலகம் ஒவ்வொரு நாளும் ஒரு பளிங்குப் பேழையைப் போல் மின்னுகிறது. இந்தப் பொலிவுக்குக் காரணம் அங்கு பணியாற்றும் அந்தப் பத்து ஊழியர்கள்தான். நூலகத்தின் நீண்ட அறைகள், வரவேற்புப் பகுதி, பிரம்மாண்டமான கண்ணாடிச் சுவர்கள் என எங்கு தேடினாலும் ஒரு சிறு தூசித் துகளைக் கூட உங்கள் கண்கள் கண்டறிய முடியாது. ஒவ்வொரு தளத்திலும் இருக்கும் கழிப்பறைகளும்கூட அதே தூய்மையுடன் பராமரிக்கப்படுகின்றன.

அன்று ஒருமுறை கழிப்பறைப் பக்கம் சென்றபோதுதான் நான் மும்தாஜை முதன்முதலில் கவனித்தேன். நீலநிறச் சீருடையில் இருந்த அவரது முகம், இடதுபுற மூக்குத்தியின் ஒளியால் பளிச்சென்று தெரிந்தது. நான் உள்ளே நுழைந்ததும், தன் கடமையை உணர்த்தும் விதமாகத் தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்றார். நான் வெளியே வந்ததும், அந்த இடத்தை மீண்டும் ஒருமுறை மெருகேற்ற உள்ளே சென்றார். வார நாட்களில் அந்தத் தளத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். வேலை முடிந்து வெளியே வந்த மும்தாஜிடம் மெல்லப் பேச்சு கொடுத்தேன்.

ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் அதிகாலை ஐந்து மணிக்கே மும்தாஜின் அன்றாடப் பணிகள் உயிர் பெற்றுவிடுகின்றன. முதலில் அவர் கீழே இருக்கும் குழந்தைகள் நூலகத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும். அங்குள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்து அடுக்க வேண்டும். குழந்தைகள் விளையாடும் இடம் என்பதால் துப்புரவுப் பணியில் அதிகக் கவனம் செலுத்துவார். விளையாட்டுப் பொருட்கள், சிறிய இருக்கைகள், சிறு கூடாரங்கள் என எதையும் விட்டுவைக்காமல் தூசு தட்டுவார். இந்தப் பணிகளை முடிக்க அவருக்கு மூன்று மணி நேரத்துக்கும் மேலாகும். நூலகம் திறக்கப்படும் ஒன்பது மணிக்கு முன்பே அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • krishnamoorthy m says:

    1200 திர்ஹம் என்பது சுமார் 30000 ரூபாய் உண்மையில் இதுவே பத்தாது…ஆனால் இதைவிட குறைவான சம்பளம் தன பங்களாதேஷ்ல் கிடைக்கும் என்பது மிகவும் கொடுமை.

Click here to post a comment

error: Content is protected !!