கிடைக்கும் சில நிமிடங்கள்
சனிக்கிழமைகளில் இருக்கும் அதே கூட்டம் அன்றும் இருந்தது. இருக்கையைத் தேடிய போது கீழ்த்தளப் பொது நூலகத்தின் மூலையில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் கண்ணில்பட்டான். அவனுக்குப் பக்கத்து இருக்கை காலியாக இருக்க, அதில் இடம்பிடித்து அமர்ந்து கொண்டேன். சில மணிநேரங்களுக்குள் புதியவர்கள் வருவதும், வாசித்து முடித்தவர்கள் கிளம்புவதுமாக இருக்கைகள் மாறிக் கொண்டிருந்தன. ஆனால் அவன் மட்டும் புத்தகங்களுக்கு நடுவே புதைந்து கிடந்தான்.
கருமை படர்ந்த லேசான தாடி, கூர்மையான நாசி, தீர்க்கமான கண்கள் என அந்த இளமைக்கு நடுவே ஒரு முதிர்ச்சி தெரிந்தது. மேஜையில் தஸ்தயெவ்ஸ்கியும், ரூமியும், நவீன அரசியல் வரலாற்று நூல்களும் குவிந்து கிடந்தன. அவன் பெயர் கியான். இரானின் ஷிராஸ் நகரத்தைச் சேர்ந்த, இப்போது துபாயில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யும் மாணவன்.
ஆராய்ச்சி மாணவன் என்றதுமே ஆர்வம் தொற்றிக்கொள்ள, மெல்லப் பேச்சு கொடுத்தேன்.








Add Comment