Home » அறிவுப் போட்டியும் அதிகாரப் போட்டியும்
நம் குரல்

அறிவுப் போட்டியும் அதிகாரப் போட்டியும்

தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியுள்ளார். உயர்கல்வித் துறையில் மாநில அரசின் அதிகாரத்தை உறுதிப்படுத்தவும், துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநரின் தன்னிச்சையான செயல்பாடுகளைத் தடுக்கவும் முன்மொழியப்பட்ட இந்த மசோதாக்கள், தற்போது மீண்டும் அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான அதிகார மோதலைப் புரிந்துகொள்ள காலனியாதிக்கக் காலத்திலிருந்து தொடங்க வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சியில் ஆளுநர் பதவிதான் உண்மையான அதிகார மையமாக இருந்தது. அரசின் முடிவுகளைச் செயல்படுத்துபவராக இல்லாமல், முடிவுகளை எடுப்பவராக ஆளுநர் இருந்தார். காவல்துறை, நீதித்துறை, சட்டம் ஒழுங்கு, நிதி ஆகிய மிக முக்கியமான துறைகள் ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் இருந்தன.

​1919ஆம் ஆண்டு மாகாணங்களில் இரட்டையாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டபோதும் கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி போன்ற துறைகள் மட்டுமே மாகாண அரசுகளிடம் கொடுக்கப்பட்டன. ஆளுநர் நிதியை விடுவித்தால்தான் எதுவும் செய்ய முடியும். எனவே, அமைச்சர்கள் ஆளுநரிடம் கையேந்த வேண்டிய நிலை இருந்தது. மாகாண சட்டமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றினாலும், ஆளுநர் நினைத்தால் அதைத் தடுத்து நிறுத்தலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!