அனிதா ஆனந்த்
கனடா நாட்டின் பிரதமராக 2015 முதல் 2025 வரை லிபரல் கட்சியின் சார்பாகப் பிரதமராக இருந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ. அரசியல் நெருக்கடி காரணமாக அவர் பதவியிலிருந்து விலகும் சூழல் உருவானது. அடுத்த பிரதமர் வேட்பாளரையும், லிபரல் கட்சியின் தலைவரையும் தேர்ந்தெடுக்கக் கட்சிக்குள் கடுமையான போட்டி நிலவியது. போட்டிக்கான அந்தப் பட்டியலில் அனிதா ஆனந்த்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
ட்ரூடோவின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த அனிதா ஆனந்த், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அனிதாவின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர். பொது அறுவை சிகிச்சை மருத்துவர். தாயார் சரோஜ் ராம் பஞ்சாபைப் பூர்வீகமாகக் கொண்டவர். மயக்க மருந்து நிபுணர்.
1960களின் தொடக்கத்தில் வட அமெரிக்க நாடுகளில் மருத்துவர்களுக்கான தேவை பெருமளவில் இருந்தது. குறிப்பாக, கனடாவின் கிராமப்புறப் பகுதிகளில் பணியாற்ற மருத்துவர்களுக்கு வாய்ப்புகள் அதிகமிருந்தன. முதலில் நைஜீரியாவில் குடியேறிய அவர்கள், குழந்தைகளின் சிறந்த கல்விக்காகவும் பாதுகாப்பான எதிர்காலத்துக்காகவும் கனடாவுக்கு இடம் பெயர்ந்தனர். நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் கெண்ட்வில் பகுதியில் வசித்து வந்த மிகச்சில தெற்காசியக் குடும்பங்களில் அனிதாவின் குடும்பமும் ஒன்று.









Add Comment