குங்கிலியம்
நூலகத்தின் கீழ்த்தளத்தில் உள்ள கேஃபடேரியாவில் காபி அருந்திக் கொண்டிருந்தேன். என் எதிரே இருந்த நாற்காலி காலியாக இருந்தது. சில நிமிடங்கள் கழித்து அங்கு வந்த முதியவர் ஒருவர், ‘இங்கு யாராவது அமர வருவார்களா?’ என்று கேட்டார்.
‘இல்லை, உட்காருங்கள்’ என்றேன். மற்ற அரபிகளைப் போல் வெள்ளை நிற கந்துரா அணிந்திருந்தாலும், அவர் தலையில் இருந்த அந்தத் தொப்பி அவரை ஓமானியர் என்று காட்டியது. ஓமானியர்கள் கைவேலைப்பாடு மிகுந்த ‘கும்மா’ (Kumma) தொப்பிகளை அணிவார்கள். அவர் அமர்ந்த சில விநாடிகளில் ஒரு செறிவான நறுமணம் அந்த மொத்த இடத்தையும் ஆக்கிரமித்தது. அவர் செல்வதற்குள் அது என்ன நறுமணம் என்று கேட்டுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
இருவரும் முகமன் கூறிக்கொண்டோம். பொதுவாக ஓமன் என்றாலே மஸ்கட் மட்டும்தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அவர் ‘நிஸ்வா’ (Nizwa) என்ற ஊரைச் சேர்ந்தவர். பெயர் ஷேக் சலீம் அல்-அலவி.










Add Comment