தீ நிலம்
நூலகத்துக்குப் பின்புறம் இருக்கும் சிறிய நீரோடை ஓரத்தில் அமர்ந்திருந்தேன். சலசலவென ஓடும் நீரின் ஓசை மனதுக்கு அமைதியைத் தந்தது. அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்து, மேரி பாய்ஸ் எழுதிய ‘Zoroastrians: Their Religious Beliefs and Practices’ என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். பண்டைய பெர்ஷியாவின் நெருப்பு வழிபாடு எனக்கு எப்போதுமே ஆர்வமூட்டும் தலைப்பு.
அப்போது எனக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர், நான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு,
‘நெருப்பு வழிபாடு குறித்த தேடலா?’ என்று கேட்டார்.










Add Comment