2. பைரவி இருக்காங்களா?
கண்கள் நிறைய கனவுகள். மனது முழுதும் ஆசைகள். சிவாஜி ராவும் அப்படித்தான். தெரிந்தது மூன்று மொழிகள். தாய்மொழியான மராத்தி, கன்னடம், கொஞ்சம் இந்தி. திரைப்படக் கல்லூரியிலும் கன்னட பேட்ச்சில்தான் சேர்ந்தார். அடிப்படைகளைக் கற்றுக் கொண்டார். காத்திருக்கத் தொடங்கினார்.
தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் அங்கு அடிக்கடி வருவது வழக்கம். அப்படியொரு முறை வந்தார் கே பாலசந்தர். மாணவர்கள் கன்னடத்தில் ஒரு சிறு நாடகம் போட்டனர். அதில் நடித்தார் சிவாஜிராவ். நிகழ்ச்சி முடிந்து பாலசந்தர் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
யதேச்சையாகத் திரும்பிப் பார்த்தபோது சிவாஜிராவின் கண்களும் அவர் கண்களும் சந்தித்தன. சிரிப்பும் ஏக்கமும் நம்பிக்கையும் நிறைந்த கூர்மையான பார்வை. அந்த இளைஞனின் நடிப்பை அவர் பார்த்திருந்தார். அவனை அழைத்து ‘தமிழ் கத்துக்கோ, ஏதாவது பண்ண முடியுமா பார்க்கலாம்’ என்று சொல்லிச் சென்றுவிட்டார்.










Add Comment