Home » மிச்சமின்றி உச்சம் தொடு – 3
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 3

நடக்கப் போகும் உண்மை

எழுபதுகளின் இறுதி. தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராக இருந்த எம்ஜிஆர் முதல்வரானார். திரைப்படங்களை விட்டு விலகினார். அவருடைய சக நடிகரும் பெரும் போட்டியாளருமான சிவாஜி கணேசனும் நாயகப் பிம்பத்திலிருந்து விலகிக் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அடுத்த தலைமுறைக்கு நகர்ந்தது தமிழ் சினிமா.

யாரும் எதிர்பாராத விதமாக, தமிழ் சினிமா கமல், ரஜினி என்ற இரட்டையர்கள் வசம் வந்தது. இவர்கள் கூட்டணிக்குப் பெரிய எதிர்பார்ப்பும், நல்ல வரவேற்பும் இருந்தது. தொடர்ந்து பல படங்களில் இணைந்து நடித்தார்கள்.

ஒருகட்டத்தில் சேர்ந்து நடிப்பதை விடத் தனித்தனியாகப் படங்கள் செய்வது என்ற முடிவெடுத்தார்கள். தனது குருநாதர் பாலசந்தர் சொன்னபடி வில்லன், குணச்சித்திர வேடங்கள் என வித்தியாசமாகத் தொடர்ந்து நடித்து வந்தார் ரஜினி. இதில் ஒரு மாற்றம் வந்தது இயக்குநர் எஸ் பி முத்துராமனால்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!