தனி வழி
தீவிர நுரையீரல் தொற்று, கல்லீரல் பிரச்சினை காரணமாகச் சற்று கவலைக்கிடமான நிலையில்தான் ரஜினி இருக்கிறார் என்று தெரிய வந்தது. அனைத்து ஊடகங்களிலும் இது தலைப்புச் செய்தியானது. மாநில, மத்திய அரசியல் பிரமுகர்கள் விசாரிக்கத் தொடங்கினார்கள். பிரதமர் முதல் முதல்வர் வரை விரைந்து உடல்நலம் தேறி வருமாறு அறிக்கை வெளியிட்டார்கள்.
ரசிகர்கள் அடுத்த கட்டத்துக்குப் போனார்கள். கோவிலுக்குக் காவடி எடுப்பது, அலகு குத்துவது, மண்சோறு உண்பது எனப் பலவிதமான பிரார்த்தனைகள். அனைத்துக் கோயில்களிலும் இவருடைய உடல்நலம் குறித்த பிரார்த்தனைதான் முதலிடம் பிடித்திருந்தது. அவர் திரும்ப வந்து நடிப்பது எல்லாம் இரண்டாம்பட்சமாகிப் போனது. அவர் நல்லபடியாகத் திரும்பினால் போதும், படங்கள் நடித்தாலும் சரி, நடிக்காவிட்டாலும் சரி என்பதே அவர்கள் பிரார்த்தனையாக இருந்தது.
சினிமா என்பதே உணர்ச்சிகளின் தொகுப்பு. வெளிப்பாடு. அதன் ரசிகர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? சிலர் அதைப் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லாம், ஆனால் அவர்கள் அப்படித்தான் பழகியிருக்கிறார்கள். பேசும் படம் தொட்டே இது மாதிரி இருந்திருக்கிறது. தான் வேறு, நடிகர் வேறு என்பதை ரசிகர்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை. இதுவே இவர்களுடைய இந்தப் போக்குக்கு மிக முக்கியக் காரணம்.










Add Comment