Home » Archives for ஆஷா பிரைட்

Author - ஆஷா பிரைட்

Avatar photo

விவசாயம்

திருடிப் பயிர் செய்!

ஒரு பழத்தை உண்ணும்போது அதன் சுவையைத் தவிர வேறு எதையும் நாம் யோசிப்பதில்லை. ஆனால் அந்தப் பழத்தின் பின்னால், சிலசமயம் பல்லாண்டுகள் உழைத்த ஒரு வேளாண் விஞ்ஞானி இருக்கலாம். ஒரு நாடு முழுவதும் நம்பிக்கையோடு எதிர்நோக்கி இருக்கும் ஒரு பெரும் முதலீடு இருக்கலாம். அதேநேரத்தில், அந்த உழைப்பையும்...

Read More
உலகம்

எத்தியோப்பியா: பற்றி எரியத் தயார்!

போர் முடிந்துவிட்டது என்று காகிதத்தில் எழுதிப் பிரகடனப்படுத்துவது எளிது. ஆனால் அந்தக் கோப்புகள் எப்போது வேண்டுமானாலும் குப்பைத் தொட்டிக்குள் செல்லலாம். போர் ஒப்பந்தங்கள் பெரும்பாலும் தற்காலிக வாழ்நாள் கொண்ட சம்பிரதாயங்கள் மட்டுமே. எத்தியோப்பியாவின் டிக்ரே பிராந்தியம் இன்று அந்த உண்மையை மீண்டும்...

Read More
ஆளுமை

ஹாங்காங்கின் காவலன்

1997 ஜூன் 30, நள்ளிரவு. ஹாங்காங் மாநாட்டு மையத்தில் கனமழை. 155 ஆண்டுகள் பறந்த பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி கீழிறங்க, ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட சிவப்புக் கொடி உயர்ந்தது. உலக ஊடகங்கள் அனைத்தும் கண்களை அந்த மேடையில் குவித்திருந்த அந்த நிமிடத்தில், ஒரு மூலையில் அமைதியாக நின்றிருந்தார் ஒரு கப்பல்...

Read More
குற்றம்

கடத்திக் குறை! – ஒரு மருத்துவ பயங்கரம்

76, 000. இது கடந்த ஆறு மாதங்களில் மட்டும் பிரேசில்-பராகுவே நாடுகளின் எல்லையில் பறிமுதல் செய்யப்பட்ட எடை குறைப்பு மருந்துப் பேனாக்களின் எண்ணிக்கை. இது கடந்த ஆண்டு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம். சிகரெட்டையும் மின்னணுச் சாதனங்களையும் கடத்திப் பழக்கப்பட்ட ஒரு எல்லையில்...

Read More
உலகம்

ஒரு மாத்திரை, ஒரு மறதி: விபரீத போதைப் பாதை

மணி இரவு பதினொன்று. மேஜை விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், ஒரு பதினான்கு வயதுப் பெண் தன் உள்ளங்கையில் இருக்கும் ஒரு மாத்திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அறையின் மறு மூலையில் படிக்கப்படாத பாடக்குறிப்புகள் அடுக்கடுக்காகக் குவிந்து கிடக்கின்றன. ஜன்னலுக்கு வெளியே சீனாவின் பெய்ஜிங் நகரம்...

Read More
உலகம்

பேய் நகரின் மோசடி சாம்ராஜ்ஜியம்

கடலோரத்தில் எழுந்த ஒரு நகரம். வானளாவிய கட்டடங்கள் வரிசையாக நிற்கின்றன. ஆனால் உள்ளே நுழைந்தால் மிஞ்சியிருப்பது வெறுமை மட்டுமே. தூசி படிந்த ஜன்னல்கள். ஆள் அரவமற்ற தெருக்கள். இதுதான் மலேசியாவின் ஃபாரெஸ்ட் சிட்டியின் தற்போதைய நிலை. ஒருகாலத்தில் ‘ஏழு லட்சம் பேர் வாழும் கனவு நகரம்’ என்ற...

Read More
உலகம்

மரணத்தை மீறிய வாக்குறுதி

பங்களாதேஷின் தெருக்களில் ஒருகாலத்தில் அவரது படம் இல்லாத சுவரே இல்லை. இன்று அதே சுவர்களில் அவரது உருவப்படங்கள் கறுப்பு மையால் அழிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. டாக்காவின் மையத்தில் இருந்த அவரது சொந்த இல்லம் இன்று ஒரு நினைவுக் காட்சியகமாக மாற்றப்பட்டு, அவரது ஆட்சிக்காலத்து அடக்குமுறைகளை...

Read More
உலகம்

உகாண்டா: வறட்சியிலிருந்து வளர்ச்சிக்கு

கிழக்கு ஆப்பிரிக்காவின் நடுவே, வெறும் 24 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவே உள்ள சிறிய நாடு உகாண்டா. உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல ஏரியான விக்டோரியா ஏரியின் கரையை ஒட்டி அமைந்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இந்நாட்டைப் பார்வையிட்டபோது, இதன் பசுமையான மலைச்...

Read More
உலகம்

அரியணை ஏறாத இளவரசி

சூரியன் உதிக்கும் நாடு. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழைமையான ஓர் அரச பரம்பரை. இன்றைய நிலையில் பதினாறு பேர் மட்டுமே மிச்சமிருக்கும் அரச குடும்பம். அந்தப் பரம்பரையின் நேர் வம்சாவளியில் நிற்கும் இளம்பெண். புன்னகையாலும் தன் புத்திசாலித்தனமான உரையாடல்களாலும் அனைவரையும் ஈர்க்கும் இளவரசி ஐகோ. தற்போதைய ஜப்பான்...

Read More
உலகம்

பிறந்தநாள் கொண்டாடாத நாடு!

அரை நூற்றாண்டு காலக் குருதி படிந்த வரலாறு. லட்சக்கணக்கான உடல்கள் புதைந்த பூமி. அந்த மண்ணில் 2011 ஜூலை 9 அன்று ஒரு புதிய கனவு மலர்ந்தது. அன்றுதான் உலகின் இளைய நாடான தெற்கு சூடான் பிறந்த நாள். அன்று அந்நாட்டின் தலைநகர் ஜுபாவின் தெருக்களில் மக்கள் மகிழ்ச்சியில் நடனமாடினர். துள்ளிக் குதித்து...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!