Home » திசையெலாம் தமிழர் – 1
திசையெலாம் தமிழர் நாள்தோறும்

திசையெலாம் தமிழர் – 1

விவசாயம் முதல் விண்வெளி வரை; அரசியல் முதல் அறிவியல் வரை உலகெங்கும் கொடி கட்டிப் பறக்கும் தமிழர்கள் பலர். இந்தத் தொடர், இந்தியாவுக்கு வெளியே பல்வேறு துறைகளில் நிகரற்ற சாதனையாளர்களாக விளங்கும் தமிழர்களை நாள்தோறும் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இன்று, இவர்:

 பிரியம்வதா நடராஜன்

2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி. நியூயார்க் நகரிலிருந்த ‘Lincoln Center for the Performance Arts’ அரங்கில் உலகெங்குமிருந்து வந்திருந்த தலைசிறந்த மனிதர்கள் குழுமியிருந்தனர். திரை நட்சத்திரங்கள் அறிவியல் அறிஞர்களோடு உரையாடிக்கொண்டிருந்தனர். சமையல்கலை நிபுணர்கள் உலகத் தலைவர்களோடு பேசிக்கொண்டிருந்தனர். மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் ஆகச்சிறந்த கவிஞர்களோடு ஆழ்ந்த விவாதத்தில் இருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் தமிழர் ஒருவரின் தலையும் தட்டுப்பட்டது. அவர் கோவையைப் பூர்வீகமாகக்கொண்ட பிரியம்வதா நடராஜன். 2024ஆம் ஆண்டு உலகின் செல்வாக்குமிக்க நூறு நபர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் பிரியம்வதா. அதற்கான விழா அரங்கில்தான் இத்தனை காட்சிகளும் அரங்கேறிக்கொண்டிருந்தன. அவர் அந்த அரங்கில் இருப்பதற்குக் காரணமாக இருந்த தந்தை நடராஜனும், இந்திய வானியற்பியலாளரான நிருபமா ராகவனும் அந்த நிகழ்வைக் காண்பதற்கு அப்போது உயிருடன் இல்லை என்பது பிரியம்வதாவுக்கு பெரும் குறையாக இருந்தது.

மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயலதிகாரி சத்யா நாதெள்ளா, உலக வங்கியின் தலைவர் அஜய் பாங்கா, ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரர் சாக்ஷி மாலிக், பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆகியோரின் வரிசையில் தமிழரான தன்னுடைய பெயரும் இடம்பெற்றிருந்ததை பிரியம்வதாவால் நம்பமுடியவில்லை. அந்தச் செய்தியைத் தாங்கி வந்திருந்த மின்னஞ்சல் உண்மைதானா எனப் பலமுறை சோதித்துப் பார்த்து உறுதிசெய்துகொண்டார். அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகளால் இந்த உலகில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தப் பட்டியல் அனைவருக்கும் உணர்த்தியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!