முகம்மது பின் ராஷித் நூலகம்
துபாய் நகரத்தைக் கழுகுப் பார்வையால் கவனித்தால் ஆங்காங்கே சிறியதும் பெரியதுமாகப் பல நூலகங்கள் தட்டுப்படும். அதில் தனித்துத் தெரிவது, ஒரு திறந்த புத்தகத்தின் வடிவில் பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் முகம்மது பின் ராஷித் நூலகம். ஏழு தளங்களைக் கொண்ட அந்த வளாகத்துக்குள் ஒவ்வொரு வாசகருக்கும் அவரவர் தேர்வுக்கேற்ப ஒரு தனி உலகம் காத்திருக்கிறது. வாரத்துக்கு இருமுறை நூலகம் செல்ல வேண்டும் என்கிற என் கடந்தகாலச் சபதம், சில நாள்களைத் தவிர மற்றபடி நிறைவேறியே வந்தது எனக்குப் பெரிய நிம்மதி.
அப்படி ஒரு புதன்கிழமையன்று முதல் தளத்திலிருந்த பொது நூலகத்தில் தஞ்சம் புகுந்திருந்தேன். அங்கிருந்த ஒவ்வொரு இருக்கையும் சிம்மாசனத்தைப் போலவே இருக்கும். மெத்தென்ற சோஃபாக்கள் , மேஜையுடன் இணைந்த நாற்காலிகள் என்று பலதரப்பட்ட வசதிகள் அங்கே விரவிக் கிடந்தன. நான் ஓர் இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தேன். அன்று வாசிப்பதை விட, என் புதிய நாவலின் முதல் அத்தியாயத்தைத் தொடங்கிவிடும் முனைப்பில் இருந்தேன்.
அப்போது இருபதுகளில் ஒரு பெண் என் அருகே வந்து அமர்ந்தாள். அடர் கோதுமை நிறத்தில் லேசாக மை கலந்ததைப் போன்ற மேனி. முகத்துக்குப் பொருத்தமான சிறிய மூக்கும் எடுப்பான உதடுகளும் அவளுக்கு அழகு சேர்த்தன. தலையில் விரல் தடிமனில் சின்னச் சின்னச் சடைகளைத் தலையோடு ஒட்டிப் போட்டிருந்தாள்.











பிழைப்புக்காகப் புலம் பெயர்ந்த மக்களிடையே பாதுகாப்புக்காக புலம் பெயர்ந்தவளின் கதை மனதைத் தொட்டது. நான் திருமணமாகி சிங்கப்பூர் வந்தப் புதிதில் வீட்டில் தனியாக இருக்க பயந்துகொண்டு பொது நூலகங்களிலேயே பொழுதைக் கழிப்பேன். ஹனீஃபாவின் கதை அந்த நாட்களை நினைவூட்டியது. நல்லதொரு தொடக்கம்.