179. இந்த விநாடி
தஞ்சப்புரியில் சார்வாகனை நாடி வரும் பிள்ளைகளுக்குப் பல நாள்களாக அவன் இல்லாதது மிகுந்த வருத்தத்தை அளித்திருந்தது. அவன் மீண்டும் வந்திருக்கிறான் என்றறிந்ததும் அத்தனை பேரும் நிசும்பசூதனியின் ஆலயத்தை அடுத்த வேப்பங்காட்டுக்கு விரைந்து வந்து சேர்ந்தார்கள்.
எங்கே சென்றுவிட்டீர்கள்? தத்தன் சொல்லிவிட்டுச் சென்றதைக் கொண்டு நீங்கள் இனி வரவே மாட்டீர்களோ என்று எண்ணிவிட்டோம்,
என்று ஓடோடி வந்து அவனைக் கட்டியணைத்துக்கொண்டார்கள். நான்கைந்து பேராகச் சேர்ந்து தூக்கித் தட்டாமாலை சுற்றி இறக்கினார்கள்.
நானில்லாவிட்டால் என்ன? நீங்கள் இருக்கிறீர்கள் அல்லவா? இந்தத் தஞ்சப்புரிக்கு மக்களின் சிந்தை தெளிவிக்க நீங்கள் போதுமப்பா,
என்று சார்வாகன் சிரித்துக்கொண்டே சொன்னான்.
ஐயனே, இம்மக்களின் சிந்தை இன்னுமொரு நூற்றாண்டுக்குத் தெளிய வாய்ப்பில்லை.











Add Comment