Home » ஏறிப் பார்! – சாகச வாழ்வில் சாதிக்கும் பெண்கள்
பெண்கள்

ஏறிப் பார்! – சாகச வாழ்வில் சாதிக்கும் பெண்கள்

கேரளாவைச் சேர்ந்த வசந்தி பெருவீட்டில் என்கிற பெண்மணி எவரெஸ்ட் பேஸ் கேம்புக்குச் சென்று மலையேற்றம் செய்துள்ளார். எவெரெஸ் சிகரம் ஏறியதைப் போலவே மகிழ்ச்சியோடு அவர் கொடுத்த போஸ் வைரலாகியது.

அதற்கு முதன்மையான காரணம் அவர் 59 வயதானவர் என்பதே. எளிமையான பின்னணியைக் கொண்டவர். தையல் வேலை செய்யும் வசந்தி யூட்யூப் காணொளிகள் பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர். தமிழ் டிவி சீரியல்கள் பார்த்து சைக்கோ நபர்களாக மாறுவதைத் தவிர்த்து இப்போது பெண்கள் பலரும் யூட்யூபுக்கு மாறிவிட்டார்கள். வசந்திக்கு, பயண வீடியோக்களைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். தானும் பயணம் மேற்கொள்ள நினைத்தவர், தன் வேலையில் கிடைக்கும் பணத்தைச் சிறுகச் சிறுகச் சேர்த்து தாய்லாந்துக்குத் தனியே போய்வந்திருக்கிறார். அவருடைய அடுத்த முயற்சிதான் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பயணம்.

ஒவ்வொரு கண்டத்தின் உச்சிப்புள்ளியான சிகரத்தைக் கணக்கிட்டால், மொத்தம் ஏழு சிகரங்கள். முதல் ஏழு சிகரங்களின் பட்டியலைத் தாண்டி, தற்சமயம் உலகின் அடுத்த ஏழு உயர்ந்த சிகரங்களின் பட்டியல் கவனம் பெற்றுள்ளது. ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள இரண்டாவது உயரமான மலைச்சிகரங்கள் இப்பட்டியலில் இடம்பெறுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!