Home » ஒய் விஜய்?
தமிழ்நாடு

ஒய் விஜய்?

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு, அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வீரர்களை அரசு அனுப்பும். சம்பளத்தை விஜய் தருவார் என்பது ஏற்பாடு.

அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், முக்கியமான பிரமுகர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிலவும் அச்சுறுத்தல்களை ஆராய்ந்து இது போன்ற பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். எஸ்பிஜி, Z+, Z, Y+, Y, X உள்பட பல அடுக்குகளில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு தேவை என்கிற கோரிக்கைகள் வைக்கப்படும்போது மத்திய உளவுத்துறை அறிக்கை, காவல்துறை பரிந்துரைகள், தனியார் பாதுகாப்பு அமைப்புகளின் அறிக்கைகள் எனப் பலவிதமான ஆய்வுகளுக்குப் பிறகு இந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பொதுவாக இன்டெலிஜென்ஸ் ப்யூரோ, ரா (RAW) ஆகிய இரு அமைப்புகளும் முக்கியமான மூத்த அரசியல் தலைவர்களுக்கான அச்சுறுத்தல்களைத் தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கின்றன.

குடியரசுத் தலைவருக்குத் தனியாக பாதுகாவலர்கள் படை ஒன்று உள்ளது. பிரசிடென்ட் பாடிகார்ட், பிபிஜி என்பார்கள். எஸ்பிஜி வகை (Special Protection Group) பாதுகாப்பு இருப்பதிலேயே உயரிய வகை. ஜீரோ எரர் என்பார்கள். தவறிழைக்காத அளவுக்குத் திறனுள்ள கடுமையான பயிற்சி பெற்ற வீரர்கள் இப்படையில் இருப்பார்கள். இந்தியப் பிரதமருக்கு மட்டுமே இந்தப் பாதுகாப்பு கிட்டும். எங்கிருந்தாலும் அவர் பாதுகாப்புக்கு இவர்களே பொறுப்பு. முன்னாள் பிரதமர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டுவந்தது. 2019ஆம் ஆண்டு இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. தற்போது இந்தியப் பிரதமர் மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு பெறுகிறார். அவரும் அவர் குடும்பத்தினரும் பதவிக்காலம் முடிந்த ஐந்தாண்டுகளுக்கு இப்பாதுகாப்பு நீடிக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!