36. வெல்பி ஆணையம்
இந்திய அரசாங்கம் எப்படி இயங்குகிறது, அதன் செலவுகளுக்கெல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா?
ஒவ்வோர் ஆண்டும் ஃபிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படுகிற இந்திய அரசின் வரவு-செலவுத் திட்டத்தைப் (Budget) படித்தால் இதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். இந்திய மக்கள் வருமான வரி, சொத்து வரி, பொருட்கள், சேவைகள் வரி (GST) என்று பல வகைகளில் வரி செலுத்துகிறார்கள். இதோடு வேறு சில வகைகளிலும் அரசாங்கத்துக்கு வருமானம் வருகிறது. இந்த ‘வரவு’கள்தான் அரசாங்கத்தின் இயக்கத்துக்கான எரிபொருள். அவர்கள் இதைப் பல வழிகளில் ‘செலவு’ செய்கிறார்கள், உள்கட்டமைப்புகளை உருவாக்குகிறார்கள், மக்களுக்கான நலத் திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.
அன்றைக்குப் பிரிட்டன் இந்தியாவை ஆண்டுகொண்டிருந்தபோதும், கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு வழிமுறைதான் பின்பற்றப்பட்டது. அதாவது, இந்தியர்கள் பல வகைகளில் அரசுக்கு வரி செலுத்தினார்கள், அதை அரசாங்கம் பல வழிகளில் செலவு செய்தது.










Add Comment